இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு


வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் நேற்று (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் வசித்து வந்த 20 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு வந்த தாயார் குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் குறித்த இளம் குடும்ப தலைவரை மீட்டு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும் குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பறயனாலங்குளம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை