இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் காலமானார்


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தை தனது 61 ஆவது வயதில் காலமானார்.

சில நாட்களாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார்.

கமல் ரத்வத்தை முன்னர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

கமல் ரத்வத்தை, முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் கிளிஃபோர்ட் ரத்வத்தையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை