கரடியனாறு கொரோனா வைத்தியசாலைக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு தொடர்பில் அங்குள்ளவர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கு மதிய உணவாக சோறு , ஒரு மீன் , கோவாச்சுண்டல் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன் காலை உணவாக புட்டு , முட்டை, குழம்பு சொதி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மூன்று நேர உணவுக்குமாக அரசாங்கம் 750/- ஒதுக்கியுள்ள நிலையில் நோயாளிகளுக்கு வழங்க்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



