முதன் முதலில் இலங்கைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் - மகிழ்ச்சியில் ஜனாதிபதி


அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் தடுப்பூசியின் 26,000 தொகுதி இன்று (05)காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன்படி, இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த Pfizer தடுப்பூசியை தெற்காசிய நாடுகளிலேயே இலங்கைக்கே முதன்முதலில் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளதுடன், மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார். 

இன்று காலை சிறப்பு செய்தி ஒன்று கிடைக்கப்பெற்றது. தெற்காசியாவில் ஃபைசர் தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடாக ஸ்ரீலங்கா திகழ்கிறது.

அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை உறுதி செய்வதற்காக பணிகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் தொடர்கிறது” என்றார்
புதியது பழையவை