தெஹிவளை சிங்கம் -அல்பா வைரஸினாலேயே பாதிக்கப்பட்டுள்ளது


தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தோர் என்ற ஆண் சிங்கமானது, பிரிட்டனில் இனங்காணப்பட்ட பி.1.1.7 அல்பா வைரஸ் தொற்றினாலேயே பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் ஒவ்வொமை நோயெதிர்ப்புப் பிரிவு மற்றும் செல் உயிரியல் பிரிவு நடத்திய பரிசோதனைகளிலேயே, குறித்த சிங்கம் அல்பா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ராகம வைத்திய பீடத்தினால் சிங்கத்துக்கு மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் சிங்கம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்பித்தில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிங்கம் எத்தகைய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் வைத்தியப்பீடம் மரபணு பரிசோதனையை மேற்கொண்டுள்ளது.

இதன்போது தோர் என்ற சிங்கம் அல்பா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
புதியது பழையவை