ஹொரவப்பொத்தானை பகுதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்ஸில் வைத்து யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரால் குறித்த யுவதி இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறினார்.
இதனையடுத்து, ஹெரவபொத்தான பொலிஸரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு சேவை வழங்கும் இவ்வாற துறைகளை சேர்ந்தவர்கள் அதற்கு முரண்பாடக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, அவர் சுட்டிக்காட்டினார்.