தாதிய உத்தியோகத்தர் சம்பளத்தை ஆசிரியரின் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பேசுவது சிறந்த கல்விமான்கள் செய்யும் வேலையா..


விசேட தர Matron ஒருவருடைய மாதாந்த சம்பளத்தை தாதிய உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளம் எனக்கூறி அதனை ஆசிரியரின் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பேசுவது சிறந்த கல்விமான்கள் செய்யும் வேலையா? என அக்கரைப்பற்று பொது வைத்தியசாலை வைத்தியர் ஹரன்ராய் கணப்பதிபிள்ளை (haranraj kanapathippillai) கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓர் தாதிய உத்தியோகத்தர் பொதுவாக வைத்தியசாலைகளில் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் அவர்களின் சேவையை முழுமையாக அனுபவித்தவர்களுக்கும் மற்றும் ஏனைய ஒரு சில சுகாதார உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் தான் தெரிய வாய்ப்பு இருக்கின்றது.

தாதியர்கள் இல்லாவிட்டால் வைத்தியசாலை இயங்குவதே மிகக் கடினமான ஒரு விடயம். அர்ப்பணிப்பு மிக்க சேவை மனப்பாங்கு கொண்ட எத்தனையோ பல தாதிய சேவையாளர்க என் வாழ்நாளில் நான் சந்தித்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.

உறக்கத்தை தொலைத்து நோயாளர்களுக்கு உன்னதமான சேவையை ஆற்றிய தாதிய உத்தியோகத்தர்களை நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டால் அதனை அனுபவ வாயிலாக அறிந்துகொள்ள முடியும்.

இரவு பகலாக கண்விழித்து சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை பொது விடுமுறை தினம் எனவும் பாராமல் இரவு பகலாக வேலை செய்யும் தாதிய உத்தியோகத்தர்களின் வேலை எவ்வாறானது என அறிந்து கொண்டு பதிவுகளை இடுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

அத்தோடு இங்கே அறியப்படுவது ஒரு Matron ஒருவருடைய சம்பளம் என்பதையும் கருத்தில் கொள்க.. அத்தோடு ஒரு வருடத்தில் ஆசிரியர்களுக்கு எத்தனை விடுமுறை தினங்கள் தாதியர் உத்தியோகத்தர்களுக்கு எத்தனை விடுமுறை தினங்கள், மேலும் கடந்த ஒரு வருடமாக ஆசிரியர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள்? என்பதையும் தாதிய உத்தியோகத்தர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதையும் சற்று ஆராய்ந்து கவனத்தில் கொள்க.

மேலும் ஓர் ஆசிரியர் வீட்டில் இருந்தவாரே வேலை செய்யலாம்.. ஆனால் ஓர் தாதிய உத்தியோகத்தர் ஆல் அவ்வாறு செய்ய முடியுமா? அல்லது வைத்தியசாலைக்கு செல்லாமல் தனது கடமைகளை செய்ய முடியுமா? அத்துடன் ஒருவர் தாதிய உத்தியோகத்தராக வருவதற்கு தாதிய பயிற்சி கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ அவர்கள் எவ்வாறு கட்டப்பட்டு மூன்றரை வருடங்கள் அல்லது நான்கரை வருடங்களின் பின்னர் தொழிலுக்கு வருகிறார்கள் என்பதை பார்த்தால் உங்களுக்கு இவ்வாறு பேசுவதற்கு மனமே வராது?
ஒரே ஒரு நாள் PPE எனும் பாதுகாப்பு கவசம் அணிந்து தொடர்ச்சியாக ஆறு மணித்தியாலங்கள் இருந்து பாருங்கள்.. அப்போது உங்களுக்கு ஒரு தாதிய உத்தியோகத்தர் படுகின்ற அவஸ்தைகள் கொஞ்சமாவது புரியும் என குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை