கண்காணிப்பு பட்டியலில் இலங்கை-அமெரிக்கா


2021 ஆம் ஆண்டுக்கான தனி ஆள் கடத்தல் அறிக்கையில் 2 அடுக்கு கண்காணிப்பு பட்டியலில் இலங்கையை, அமெரிக்கா நிலைப்படுத்தியுள்ளது.

கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, ஆனால் அவ்வாறு செய்ய குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் நடத்தும் அனாதை இல்லங்களில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றச்சாட்டுகளை விசாரித்தல் ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்ற முயற்சிகளில் அடங்கும் என ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனி ஆள் கடத்தல் தடுப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு திரட்டுதல் குறித்து சர்வதேச அமைப்புகளுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
எனினும் முந்தைய அறிக்கையிடலுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்தமாக முன்னேற்ற முயற்சிகளை அரசாங்கம் நிரூபிக்கவில்லை என்று அமெரிக்க அறிக்கை கூறுகிறது.

முன்னைய ஆண்டுகளில் சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தெரிவிக்கவில்லை.
அத்துடன் வெளிநாடுகளில் கட்டாய பணிகளால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் உரிய முறையில் முன்னெடுக்கவில்லை.

இந்தக் குறைபாடுகள் காரணமாக இலங்கையை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக 2 அடுக்கு கண்காணிப்பு பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை