விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏற்பட்ட நிலையே உருவாகும் - பகிரங்க மிரட்டல்

இப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்து தூக்கி செல்லும் சம்பவங்களை நடக்கின்றதாக முன்னாள் நீதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(06) செவ்வாய்க்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேளையில், பிரபாகரனை சுட்டுக்கொன்று நாயைபோல் இழுத்துவந்தது நினைவில் உள்ளதா என்று ஜனாதிபதி கேட்டார்.

இப்போது பிரபாகரனுக்கு நடந்ததுபோல் தான் நடக்குமென மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடகவியலாளர் ஒருவரை பகிரங்கமாக மிரட்டுகின்றார்.

நாடு எங்கே செல்கின்றது. வெள்ளை வான் பற்றி பேசுகின்றனர், இதற்கு முன்னர் ஊடகவியாளர்களுக்கு நடந்தது மீண்டும் இடம்பெறப்போகின்றதா என கேள்வி எழுகின்றது.

இவர்களின் கடந்த ஆட்சியில் கொலை மிரட்டல்களினால் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் .அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

காணமால் போனோர் குறித்த காரியாலயம் அவசியமா ஒன்றாகும், இவர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து நாம் எதிர்ப்பை வெளிப்படுத்த மாட்டோம். ஆனால் இந்த காரியால தலைவர் சாலிய பீரிஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு போட்டியிட்ட வேளையில் இந்த ஆட்சியில் சிலர் அவரை அவமதித்தனர்.

வடக்கு கிழக்கில் மக்களை மாத்திரம் இலக்கு வைத்து இந்த காரியாலம் உருவாக்கப்படவில்லை. 1983ஆம் ஆண்டில் இருந்து தேடுவதற்கு இந்த காரியாலயம் உருவாக்கப்பட்டது என்றார்.
புதியது பழையவை