மட்டக்களப்பு கல்லடியில் தனது மனைவியை பற்றி அவதூறாக பேசிய நபர் ஒருவரிடம் அது தொடர்பாக கேட்க சென்றவர் மீது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (26) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை கத்திகுத்து தாக்குதலை நடாத்திய 32 வயதுடைய செரன் அவுஸ்கோன் என்பவர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

