எதிர்க் கட்சித் தலைவர்- அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு


எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலிக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்க்கட்சி; தலைவர் அலுவலகத்தில் இன்று (3) நடைபெற்றது.

இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றதோடு, கடுமையான பேரழிவாக மாறியுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்தும் இரு தரப்பினராலும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார். உயர்ஸ்தானிகர் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.

அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியால் செயற்படுத்தப்படுத்தப்பட்டு வரும் ‘எதிர்க் கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ திட்டத்துக்கு அமைவாக வைத்தியசாலை உபகரணங்களை வழங்குவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

சுமார் ஒன்றறை மணித்தியாலங்களுக்கும் மேல் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஏழு தசாப்தங்களுக்கும் மேலான உறவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
புதியது பழையவை