கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இந்த மாத இறுதிக்குள் மீளத்திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று 02-07-2021ஆம் திகதி அறிவித்துள்ளார்.
கொழும்பு – பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். அதற்கமைய, பாடசாலைகள் திறக்கப்பட முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி நிச்சயம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
50 மாணவர்களுக்கும் குறைவான 1439 பாடசாலைகள், 50 தொடக்கம் 100 மாணவர்கள் வரையான 1523 பாடசாலைகள் என 2962 பாடசாலைகளை மீளத்திறக்க உத்தேசித்திருப்பதாகவும், சுகாதார நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றவுடன் இறுதி முடிவை எடுப்பதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.