பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்


கிழக்கு மாகணத்திற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் விஜயத்தை முன்னிட்டு பாகிஸ்தான்-இலங்கை நட்புறவின் அடையாளமாக இன்று 02-07-2021ஆம் திகதி பொத்துவில் தனியார் விடுதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொத்துவில் பிரதேச மக்களுக்கு உலருணவுகள் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், விளையாட்டு கழக வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஸாரப் முதுநபினின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாட் ஹட்டக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த பொருட்களை வழங்கி வைத்தார்.

இதன்போது கொரோணா தொற்றிலிருந்து நாடு விடுபடவும், கொரோணா தொற்றாளர்கள் விரைவில் குணமாகவும் வேண்டி பொத்துவில் சிங்கபுர சமுத்ரகிரி விகாராதிபதி இந்திரி உபனந்த, சாளம்படிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க. கான்டிபன் சர்மா, மேதடிஸ் தேவாலய போதகர் அருட்தந்தை பிலிப்குமார் , மௌலவி சுபைர் அகில் முகம்மட் (சித்திக்கி) ஆகியோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தருவன் அனுராத, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச். அப்துல் றஹீம், சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்ற தலைவர் ஏ.எம். ஜஹ்பர், உட்பட பல முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை