மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ராணுவ தலைமை அதிகாரியாக பதவியேற்பு


மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 58-வது இராணுவதலைமை அதிகாரியாக இன்று(20) காலை பதவியேற்றார்.

இன்றுகாலை 10:45 சுபநேரத்தில் இராணுவத் தளபதியிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்று உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக பணியாற்றி யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறுபட்ட சமூக சேவைகளை புரிந்து நேற்று முன்தினம் இராணுவத் தலைமையகத்துக்கு இடம்மாற்றலாகி சென்ற மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இன்று காலை ராணுவத்தின் தலைமை அதிகாரியாக இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்று உத்தியோகபூர்வமாக தனதுகடமைகளை ஆரம்பித்திருந்தார்.
புதியது பழையவை