மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 07கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கடந்த 15 தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் இன்று அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் மாமாங்கம் பகுதிகளில் 110 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் 50 பேருக்கு பீசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் அன்டிஜன் பரிசோதனைகளில் 07கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.