இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களது வீட்டிற்கு முன்பாக கடந்த 21ஆம் திகதி அவரது மெய்க்காவலரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ந. பாலசுந்தரத்தின் வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று 09.07.2021ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்படவேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ளமையால் அனைத்து ஆவணங்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.