மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவினரால் இன்று 09-07-2021ஆம் திகதி களுமுந்தன் வெளி கிராமத்தில் சேதனைப்பசளை தயாரிப்பு மற்றும் பாவனை முறை தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
விவசாயப் போதனாசிரியர் ப.சகாப்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சேதனைப்பசளை பயன்பாடுகள், குறித்த தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டதுடன் விவசாயிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து கலந்துரையாடல்களும் இடமபெற்றன.