தாதியர்கள் மற்றும் பல் மருத்தவர்களின் ஓய்வூதிய வயதை 63 ஆண்டுகளாக உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கூன் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, பல் மருத்துவ நிபுணர்களுக்கான ஓய்வூதிய வயது ஏப்ரல் 5, 2021 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் தாதியர்களுக்கான ஓய்வூதிய வயது 2021 ஜூன் 14 முதல் நடைமுறைக்கு வரும்.
#S
முன்னதாக, பொது சேவையில் உள்ள அனைத்து தரங்களின் மருத்துவ அதிகாரிகளின் ஓய்வூதிய வயதை 63 ஆண்டுகளாக நீடிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.