காத்தான் குடியில் மீட்கப்பட்ட கைக்குண்டினை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை


மட்டக்களப்பு- காத்தான்குடியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காத்தான்குடி 6ஆம் வட்டாரத்திலுள்ள கைவிடப்பட்ட காணியிலேயே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு நேற்று மாலை, விறகு எடுக்கச் சென்ற பெண்ணொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கைக்குண்டை மீட்ட காத்தான்குடி பொலிஸார் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
புதியது பழையவை