மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று 10-07-2021 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாழங்குடா சமுர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் சுஜித்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.