இராணுவ வாகனத்துடன் எரிபொருள் பவுஸர் மோதி விபத்து


எரிபொருள் பவுஸர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றுடன் இன்று 05-07-2021ஆம் திகதி  அதிகாலை மோதியதில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மேலும் 5 இராணுவத்தினர் மஹவ மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதெனிய - அனுராபுரம் வீதியின் அம்பகஸ்வெவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் விஷ்வமடு இராணுவ முகாம்களில் இருந்து 7 இராணுவத்தினரை அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பவுஸர் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பவுஸர் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை