கிரிபத்கோட பகுதியில் போலி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை தயாரிக்கும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது
கிரிபத்கோட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பகுதியில் இருந்து 66 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இதன்போது போலி அடையாள அட்டைகள் ஐந்து உட்பட , போலி சாரதி அனுமதி பத்திரம் மற்றும் ஐந்து அச்சு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(26) மகர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
