மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார் ஆலயம்14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார் ஆலயம்14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது
 அத்துடன் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஐவருக்கு  எதிராக மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆலயபிரதமகுருக்கள் உள்ளிட்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில்  நேற்று (08) தீர்த்தோற்சவ நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

 இந்த நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்றவர்களை அடையாளங் காணும்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



புதியது பழையவை