ஸ்ரீலங்கா விமானப்படையின் மிலேச்சத்தனமான செஞ்சோலை படுகொலை 15 ம் ஆண்டு நினைவு நாள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 54 பேரும் சிறுவர் இல்ல பணியாளர்கள் 7 பேரும் உள்ளடங்கலாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்தாக்குதலின் 15 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட சிறுவர் இல்ல வளாகத்தில் அனுஸ்ரிக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை.
இருப்பினும் இம்முறை குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஸ்ரிக்க பொலிசார் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் தடைவிதித்துள்ளனர்.

குறிப்பாக வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தை சூழ இராணுவம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதோடு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்திற்கு செல்லும் வீதிகள் எங்கும் பொலிசார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிராமத்தில் வசிப்பவர்கள் கூட கிராமத்துக்கு செல்லும் இடங்களில் எங்கு செல்கிறீர்கள் என விசாரிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக ஊடகவியலாளர்களை கூட மறித்து அடையாள அட்டை பார்வையிட்டே குறித்த பகுதியிக்கு செல்ல அனுமதிக்கின்றனர்.

நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோரை கூட அப்பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்களால் அவர்களுடைய வீடுகளில் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை