வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்தை 2022 ஒத்திவைப்பு

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இந் நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபய காரர்களுடன் ஆலய வளாகத்தில் இன்றைய(14) தினம் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தி இருந்தனர்.
அக்கலந்துரையாடலின் முடிவில் , ஆலய மகோற்சவத்தை அடுத்த வருடம் மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்கு ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை