முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்டதன் 218 ஆம் ஆண்டு வெற்றி நாளான (25) இன்று முல்லைத்தீவில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் பண்டார வன்னியனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டார வன்னியனின் திரு படத்துக்கு சுடர் ஏற்றி , மலர்தூவி நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டது.