மனித நுகர்வுக்குப் பயன்படுத்த முடியாத சீனியுடன் இருவர் கைது


புறக்கோட்டை யோவுன் வீதியில், மனித நுகர்வுக்குப் பயன்படுத்த முடியாத 50 கிலோகிராம் சீனியுடன் இருவரை, புறக்கோட்டைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
லொறியொன்றில் கொழும்பிலிருந்து அம்பாறைக்குக் கொண்டுச் செல்வதற்குத் தயாராகவிருந்த நிலையில், 50 கிலோகிராம் சீனி மீட்கப்பட்டுள்ளது.

200 மூடைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலைத் தொடர்ந்து குறித்தப் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளதுடன் சீனியையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது லொறியின் சாரதியும் உதவியாளருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை