மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
கடந்த ஏழு தினங்களில் 2086கொரனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொற்றாளர்களும் மரணங்களும் அதிகரித்துவருவதன் காரணமாக பொதுமக்கள் சமூகப்பொறுப்புடன் செயற்படுவதன்மூலம் மட்டுமே இந்த நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவோர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிககைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.