யாழில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு இடர் கால நிதி வழங்கி வைப்பு

யாழ் மாவட்டத்தில் இன்றைய(24) தினம் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு இடர் கால நிதி வழங்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன் தெரிவித்தார்.
நெடுந்தீவு ,வேலணை ,யாழ்ப்பாணம், மருதங்கேணி, பருத்தித்துறை, ஆகிய பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் இடர் கால நிதியான இரண்டாயிரம் ரூபா உதவித்தொகையானது இன்றைய தினம் அந்தந்த பிரதேச செயலரின் வழிநடத்தலின் கீழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இடர் கால உதவித்தொகையானது தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வுள்ளதாகவும் தெரிவித்தார் .

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 36 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இடர் கால உதவித் தொகை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் தொடர்ச்சியாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
புதியது பழையவை