கொவிட் மரணங்கள் குறித்து பிரேத பரிசோதனை செய்த முதல் நாடாக இலங்கை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30 வீத மரணங்கள் கொவிட் நியுமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக முல்லேரியா மற்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைமை விசேட அதிகாரி, நீதித்துறை மருத்துவ தலைமை அதிகாரி சன்ன பெரேரா தெரிவித்தார்.
மேலும், கொவிட் மரணங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளின் படி இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 100 கொவிட் மரணங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கொரோனா தொற்றுடன் மரணித்த ஒருவரின் முதல் பிரேத பரிசோதனை 2020 மே 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.