இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது.


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

தொற்றுக்குள்ளான நிலையில், கடந்த 4 நாட்களாக அறிக்கையில் பதிவுசெய்யப்படாத மேலும் 4 ஆயிரத்து 484 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த அதிகரிப்புஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின்எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு மேலும்தெரிவித்துள்ளது.
புதியது பழையவை