போதைப்பொருள் கடத்தல்காரரான 52 வயதான பெண் கைது


போதைப்பொருள் கடத்தல்காரரான 52 வயதான பெண் ஓருவர் 2.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் கிரிபத்கொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பகுதியில் வசித்து வந்த இவர், கிரிபத்கொட, ராகம மற்றும் களனி பகுதிகளில் நீண்ட காலமாக ஹெரோய்ன் விநியோகித்து வந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 11 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் 26 இலட்சத்து 65 ஆயிரத்து 100 ரூபாய் பணம் ஆகியன பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிரிபத்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை