சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றம் அபராதம் விதிப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளியில் சட்டவிரேதமாக உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மற்றும் அனுமதிபத்திர நிபந்தனையை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உட்பட 3 பேருக்கு 3 இலச்சத்து 25 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி நேற்று வெள்ளிக்கிழமை (27) உத்தரவிட்டார்.

வெல்லாவெளி காவற்துறை பிரிவிலுள்ள மூங்கிலாறு பகுதியில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரையும் அனுமதிபத்திர நிபந்தனையை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உட்பட மூன்று பேரை வியாழக்கிழமை கைது செய்ததுடன் 3 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தியபோது சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 3 இலச்சம் ரூபாவையும் அனுமதிபத்தர நிபந்தனையை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாவையும் தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
புதியது பழையவை