சிவயோகனாதன் என்பவரை பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவிற்கு அழைப்பு

மட்டக்களப்பு - முகத்துவாரம் பகுதியில் சபாரத்தினம் சிவயோகனாதன் என்பவரை மட்டக்களப்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிற்கு வாக்குமூலமளிக்க சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 11.20 மணியளவில் குறித்த நபரின் வீட்டிற்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் இருவர்,
இன்று 25.08.2021 மதியம் 12.30 மணிக்கு கல்லடி காட்டுக் கந்தோர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு எழுத்து மூலமான கடிதத்தினை வழங்கி சென்றுள்ளனர்.

வரும் பொழுது கையடக்க தொலைபேசி, இவருடைய பெயரில் எடுக்கப்பட்ட சிம் காரட், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பனவற்றையும் எடுத்து வருமாறு பணிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை