வவுனியா ஓமந்தை பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று (17)காலை ஓமந்தை பாலமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே திடீர் என மயங்கி விழுந்துள்ளார்.
எனினும் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியை சேர்ந்த சதாசிவம் ரவிக்குமார் என்ற 54 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட றபிட் அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆயினும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.