கல்முனையிலிருந்து இன்று 17-08-2021 ஆம் திகதி அதிகாலை அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கனரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி கடையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனவும், கடையின் முன்புறம் மற்றும் அருகிலிருந்த மின்கம்பம் ஆகியன சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.