திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் - பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,பட்டா வாகனத்தைச் செலுத்திச் சென்ற நபரை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.