பிலியந்தலை முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர் உட்பட அனைத்து ஊழியர்களும் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை சுகாதார மருத்துவ அதிகாரி டொக்டர் இந்திகா எல்லாவல தெரிவித்தார்.
முதியோர் இல்லத்தில் இருபது முதியவர்கள் மற்றும் ஆறு ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் இட நெரிசல் காரணமாக, நோயாளிகள் அதே முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் அருணா ஜெயதிலக, பிலியந்தலை சுகாதார மருத்துவ அதிகாரி டொக்டர் இந்திகா எல்லாவல, பிலியந்தலை மாவட்ட மருத்துவமனை மருத்துவ அதிகாரி டொக்டர் நந்தனி சோமரத்ன மற்றும் அவர்கள் தலைமையிலான குழுவினர் முதியோர் இல்லத்திற்கு சென்று கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர்.
