காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸ் பாதுகாப்புடன் நடமாடி வருவதாக தெரிவித்தார்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தினார் என கூறி அவர் மீது முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்கள் சில கண்டனம் தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் அவருக்கு எதிராக 30 இற்கும் எதிரான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவரிடம் சம்மாந்துறை பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்.
இதேவேளை, இந்தக்குற்றச்சாட்டை ஜெயசிறில் மறுத்துள்ளார்.போலியான பேஸ்புக் கணக்கொன்றின் ஊடாக பகிரப்பட்ட தகவல் அதுவென்றும், தனது பேஸ்புக்கில் எப்படி பகிரப்பட்டது என்பது சந்தேகமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து, அவருக்கு கொலை மிரட்டல்கள் ஏராளம் வந்தவண்ணமுள்ளதாக அவர் தெரிவித்தார. “நாம் சஹ்ரானின் ஆட்கள்… கண்ட இடத்தில் வெடிப்போம்“ என குரல் ஒலிப்பதிவு மூலமாக தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
