முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் இன்று (06.08.21) ஏற்பட்ட தீவிபத்தின் போது இளம் குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
கடந்த 2018 ஆண்டு தொடக்கம் குறித்த தற்காலிக வீட்டில் வசித்து வரும் இளம் குடும்பம் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் இன்று வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தின் போது தற்காலிக வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
நாளாந்தம் கூலி வேலை செய்யும் இளம் குடும்பத்திற்கு இதுவரை அரசாங்கத்தின் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இந்த தீவிபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.