மட்டக்களப்பு சந்தி வெளியையும் திகிலிவெட்டையையும் இணைக்கும் ஆற்றின் பாதையின் ஊடாக கடந்து வயலுக்கு சென்று வீடு திரும்பிய போது பாதையில் இருந்து தவறி ஆற்றில் வீழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) பிற்பகலில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்தனர்.
சித்தாண்டி 2ம் பிரிவைச் சோந்த 45 வயதுடைய பாக்கியராசா மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழமை போல குறித்த ஆற்றை சந்திவெளியிலுள்ள பாதையின் ஊடாக கடந்து திகிலிவெட்டை பிரதேசத்திலுள்ள வயலுக்கு சம்பவதினமான இன்று காலை சென்று அங்கிருந்து சுமார் 4 மணிக்கு பாதையூடாக வீட்டிற்கு செல்வதற்காக கடந்தபோது வலிப்பு ஏற்பட்டதையடுத்து பாதையில் இருந்து தவறி ஆற்றில் வீழ்ததையடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாதாக காவற்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
குறித்த சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.