மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெண்ணை மறித்து தாலிக்கொடிஅபகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெண் ஒருவரை, பிறிதொரு மோட்டர் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், வழிமறித்து, பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்தெடுத்து தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியில் (05) மாலை இடம்பெற்றுள்ளது.

6 அரை பவுண் கொண்ட தாலிக்கொடியே மேற்படி கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது பெண் சத்தமிட்டதையடுத்து, உதவிக்கு வந்தவர்களால் பெண் காப்பற்றப்பட்டுள்ளார். எனினும், அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டர்சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற கல்முனை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
புதியது பழையவை