ஒரே இலக்கத் தகட்டுடன் இரு கார்கள்


மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு இலக்கத்தில் இரு கார்களுக்கு இலக்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதுடன்  குறித்த காரின் எஞ்சின் இலக்கம் மற்றும் செசி இலக்கம் வேறுவேறு இலக்கங்களை கொண்ட கார் ஒன்றை நேற்று (14) சனிக்கிழமை காத்தான்குடி பகுதியில் வைத்து கைப்பற்றியதுடன் அதன் சாரதியை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியில் போக்குவரத்து பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு வீதிரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வீதியில் பிரயாணித்த கார் ஒன்றை சந்தேகம் கொண்டு நிறுத்தி காவற்துறையினர் சோதனையிட்டபோது காரின் எஞ்சின் இலக்கமும் காரின் செசி இலக்கமும் வேறு வேறாக உள்ளதையடுத்து அந்த வாடகைக்கு விடப்பட்டு வரும் காரை கைப்பற்றியதுடன் அதன் சாரதியையும் கைது செய்தனர்.

இதனையடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த காரின் இலக்கத்தில் குருநாகலில் ஒருகார் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து காவற்துறையினர் இந்த இரு கார்களின் எந்த கார் குறித்த இலக்கத்துக்கு உரியது என கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  





புதியது பழையவை