அமெரிக்காவிடம் இருந்து மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.
இதன்படி ஒரு லட்சத்து 50 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையமூடாக இன்று(30) அதிகாலை நாட்டிற்கு கொண்டவரப்பட்டதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகள் கடந்தவாரம் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பு பைசர் தடுப்பூசியினை நிர்வகிப்பதற்கான முழுமையான அதிகாரம் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே பைசர் தடுப்பூசியினை பெறுவதற்கு பொருத்தமற்றவரகளாக அடையாளங் காணப்படும் நபர்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.