சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் பொருட்கள் தடை

சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் மேலும் 08 பொருட்களை தடை செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுற்றாடல்துறை அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் இடியப்பத் தட்டு, கோப்பைகள், கரண்டிகள் உட்பட மேலும் 08 பொருட்களே தடை செய்யப்படவுள்ளன.

உணவைப் பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள்களை (lunch sheets) தடை செய்யும் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
புதியது பழையவை