இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை 13-08-2021 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்தை அடை யாளப்படுத்தும் வகையில் செம்மணி பிரதான வீதியில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியினால் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து நல்லூர் ஆலய நிர்வாகத்தினரால் நல்லூர் ஆலயத்தை அடையாளப்படுத்தும் வகையில்அமைக்கப்பட்டு இவ்வருடம் தைப்பொங்கல் தினத்தன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட நல்லூர் வரவேற்பு வளைவில் நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை அடையாளப்படுத்தும் முகமாக சம்பிரதாய பூர்வமாக கொடி கட்டும் நிகழ்வு இன்று மதியம் 12 மணிக்கு இடம்பெற்றனர்.
நல்லூர் ஆலய அறங்காவலர் சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொடி கட்டும் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் கலந்து கொண்டனர்.


