கடந்த சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பு சுவிஸ் கிராமம் பகுதியில் ஐஸ் போதை பொருட்களை பாவித்து நிறை போதை நிலையில் நின்ற காவாலிகள் அப்பகுதி ஊடக கடலுக்குச் சென்று வீடு திரும்பிய வேளை குறித்த மீனவன் ஐஸ் போதைப் பொருள் காவாளிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான ரயில்வே கடவையில் கட்டி போட்டு தப்பி சென்றுள்ளனர்.
அப்பகுதியால் சென்ற சிலர் அவர் தண்டவாளத்தில் கொரூரமாக தாக்கப்பட்டு கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவரை அவதானித்த சிலர் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த ஐஸ் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் காவாலிகள் சுவிஸ் கிராமப் பகுதியில் பல குற்றச்செயல்களுடனும் போதை வஸ்து பாவனக்கும் அடிமையானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
குறித்தபோதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பாக இதுவரைக்கும் கொக்குவில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.
கொடூரமாக தாக்கி தண்டவாளத்தில் கட்டி வைத்துவிட்டு தப்பித்துச் சென்ற நபர்கள் இதுவரையும் வீடு திரும்ப வில்லை என அறிய முடிகின்றது.
குறித்த காவாலிகள் எங்காவது ஒளித்து இருந்தால் இவர்களைக் கண்டவர்கள் பக்கத்தில் உள்ள போலீசாரில் முறையிடவும்.