இலங்கையில் இன்று(17) முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ இன்று முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பதிவு திருமணத்தை நடத்துவதாயின் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும். இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை.” என அவர் கூறியுள்ளார்.