முச்சக்கரவண்டியை பிரட்டிபோட்ட யானை -வைரலாகும் காட்சி

புத்தள இருந்து கதிர்காமம் செல்லும் B35 வீதியில் பயணிகளுடன் சென்ற முச்சக்கரவண்டியினை யானை ஒன்று உருட்டி பிரட்டியிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, புத்தள இருந்து கதிர்காமம் செல்லும் B35 வீதியில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் யானைக்கு உணவு வழங்கியிருக்கிறார்.

குறித்த முச்சக்கரவண்டியில் இருந்து யானை உணவை எடுத்துவிட்டு பயணிகள் சென்ற முச்சக்கரவண்டியினை உருட்டி பிரட்டியிருக்கிறது. இந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே குறித்த வீதியில் செல்லும் பயணிகள் அவதானமாக செல்லுமாறு வேண்டுகிறோம்.

புதியது பழையவை