நேற்று (15)காலை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு விமான அம்பியூலன்ஸ் ஒன்று வருகைதந்துள்ளது, இந்த அம்பியூலன்ஸ் மூலம் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வந்த விசேட விமானம் இலங்கையை சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவரை சிகிச்சைக்காக அழைத்துசென்றுள்ளது விசேட விமானம் மூலம் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட மிக மிக முக்கிய பிரமுகர் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
நாட்டில் காணப்படுகின்ற கொரோனா நிலைமைக்கு மத்தியில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எனினும் மர்மவிமானம் மூலம் அழைத்து செல்லப்பட்ட மிக மிக முக்கிய பிரமுகர் கொரோனா நோயாளியாகயிருக்க முடியாது ஏனென்றால் கொவிட் நோயாளிகள் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. யார் அந்த மர்ம விவிஐபி?
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கிசிச்சை வழங்கப்படுகின்றது. குறிப்பிட்ட அம்புலன்ஸ் விமானம் மங்களசமரவீரவை அழைத்து செல்லவந்தது, அமெரிக்க அரசியலின் முக்கிய பெண்மணியே அதனை அனுப்பினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை சிங்கப்பூருக்கு அழைத்து சென்றிருக்கமாட்டார்கள்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்தும் தீவிரகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.